Sunday, May 29, 2005

பல்லவியும் சரணமும் NO.25 - வெள்ளி விழா SPECIAL பதிவு

25 வாரங்கள் (நடுவில் ஓரிரு வாரங்கள் விட்டுப் போயிருக்கலாம்!) இப்போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டி, நல்ல பாடல்களைத் தேடி எடுப்பதில் என் காவு தீர்ந்து விட்டது :))

அதனால், 25-வதுடன், பல்லவியும் சரணமும் விளையாட்டை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்திருக்கிறேன். இது வரை வந்த மொத்த 'பல்லவியும் சரணமும்' பதிவுகளில் கேட்கப்பட்ட சரணங்களில், உங்களால் விடை கூற முடியாதாவை என்று பார்த்தால், பத்து அல்லது பதினொன்று மட்டுமே தேறும் :))

உங்களது பேரார்வமும், பழைய பாடல்களின் மீதான விருப்பமும் தான், என்னை இப்போட்டியை தொடர்ந்து நடத்த வைத்தது. "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் தொடர்ந்து பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!

24 பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் ஒரு முறை பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு பத்துக்கும் விடைகள் தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனென்றால், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே! 5 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. கலங்குதே கண்கள், நான் போன ஜென்மம் செய்த பாவம் ...

2. மாலை முதல் காலை வரை சொன்னாலென்ன காதல் கதை...

3. இனி பிரிவதில்லை என்னை விடுவதில்லை ...

4. முள் வேலியா, முல்லைப்பூவா சொல்லு...

5. பெண் பெயரை உச்சரித்தே பேசும் ...

6. தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் ...

7. தோள சுத்த காயமாச்சு ...

8. வளையோசை தான் நல்ல மணிமந்திரம் ...

9. இளமைக்கு பொருள் சொல்ல வரவா ...

10. உன் விழி ஓடையில் நான் கலந்தேன் ...

11. உனை நான் கொஞ்சத் தான் மடி மேல் ...

12. என்ன இன்பம் அம்மா உன் இளமை...

13. உள்மூச்சு வாங்கினேனே, முள் மீது தூங்கினேனே ...

14. என் உடல் உனக்கிங்கு சமர்ப்பணம் ...

15. தோள்களிலே போட்டு வைத்தாய் பொன்னழகு மஞ்சம் ...

16. தை மாசம், மல்லிகைப்பூ மணம் வீசும் ...

17. பாட்டைக் கேட்டு கிறங்கிப் போயி நாரத் தானே முடிஞ்சேன் ...

18. என் வானிலே ஒரு தேவமின்னல் வந்தது ...

19. உன் முகம் பார்க்கிறேன், அதில் என் முகம் ....

20. நீங்காத ரீங்காரம் நான் தானே, நெஞ்சோடு ....

21. வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் ...

22. கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ ...

23. கூண்டை விட்டுக் கிளி வந்தது ....

24. நாணத்தில் நீ இருப்பாய் மோனத்தில் நான் இருப்பேன் ...

25. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

26 மறுமொழிகள்:

said...

//11. உனை நான் கொஞ்சத் தான் மடி மேல் //

ஓ பட்டர் ஃபிளை

//13. உள்மூச்சு வாங்கினேனே, முள் மீது தூங்கினேனே ...//

மலையோரம் வீசும் காற்று

//25. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை ...//

கனவு காணும் வாழ்க்கை யாவும்

சீமாச்சு.. said...

5. பெண் பெயரை உச்சரித்தே பேசும் ...
பாடல் - 'என்ன சத்தம் இந்த நேரம்.." - புன்னகை மன்னன்.

7. தோள சுத்த காயமாச்சு
பாடல் - "ஏதோ மோகம்.. ஏதோ ராகம்.." - கோழி கூவுது

17. பாட்டைக் கேட்டு கிறங்கிப் போயி நாரத் தானே முடிஞ்சேன் ...
பாடல் - "எண்ணியிருந்தது ஈடேற.." - அந்த 7 நாட்கள்.

21. வரையறைகளை மாற்றும்போது தலைமுறைகளும் ...
பாடல் - "வெள்ளைப்புறாவொன்று ஏங்குது.." - புதுக்கவிதை

25. உடம்பு என்பது உண்மையில் என்ன, கனவுகள் வாங்கும் பை ...
பாடல் - "கனவு காணும் வாழ்க்கையெல்லாம்.." - நீங்கள் கேட்டவை

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு....

Jayaprakash Sampath said...

first attempt

2. துள்ளி எழுந்தது பாட்டு : கீதாஞ்சலி
8. ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் - நான் அடிமை இல்லை
23. நானாக நானில்லை தாயே - தூங்காதே தம்பி தூங்காதே

ச.சங்கர் said...

//16-- ஆசய காத்துல தூது விட்டு --- ஜானீ
//18-- வா...வா... வசந்தமே --------------புதுக்கவிதை
//19-- பூவே பூச்சூட வா----------------பூவே பூச்சூட வா
//22-- மௌனமான நேரம்----------------- சலங்கை ஒலி

as per game rules நாலோட நிறுத்திகிறேன்.

Jayaprakash Sampath said...

20. வளையோசை கலகலவென - சத்யா

ஒரு பொடிச்சி said...

4- Nilave va (mauna ragam)

20- Poove Sempoove??? (solla thudikuthu manasu)

enRenRum-anbudan.BALA said...

நண்பர்களே,
எப்போதும் போல் போட்டுத் தாக்கி விட்டீர்கள் :)

பரணீ மூன்றுக்கு (3/3) சரியான விடை தந்தார். இருந்தாலும், அவருக்கு 85% தான். ஏனெனில், திரைப்படங்களின் பெயர்களை விட்டு விட்டார் !!!!!

சீமாச்சு scored 5/5. அந்த 5 பாடல்களின் படங்களையும் சரியாகக் கூறியதால், அவருக்கு 100% :) சூப்பர் !!!!!

ஐகாரஸ் (as usual, being an expert!) attempted 4 and got them correct. அவருக்கும் 100% வழங்குகிறேன் !!!!!!!!!

S.sankar அவர்களும் பழைய பாடல்களில் கில்லாடி என்பது நானறிந்த விடயம் தான் :) அவருக்கும் நூறு மதிப்பெண்கள் !!!

பொடிச்சி,
WELCOME :)
நாலாவதுக்கு உங்கள் விடை சரியே !!!
20. ஐகாரஸ் சொல்லி விட்டார். நீங்கள் சொல்லியது தவறு :(
அதனால், உங்களுக்கு 50% தான் (1 out of 2!)

இன்னும் ஒன்பது சரணங்களுக்கு (1,3,6,9,10,12,14,15,24) பல்லவிகள் கண்டு பிடிக்கப் படவில்லை. இனி, RULES எதுவும் கிடையாது. யார் வேண்டுமானாலும் முயற்சிக்கலாம் !!!!!

ரோசாவசந்த் இப்பதிவை பார்க்கும் நேரம் (நாளை) அவர் கண்டுபிடிக்க ஏதாவது மிச்சம் இருக்கும் என்று தோன்றவில்லை :-)

என்றென்றும் அன்புடன்
பாலா

Jayaprakash Sampath said...

10. நான் தேடும் செவந்திப்பூவிது - தர்மபத்தினி

Venkat said...

12. அந்தாமானைப் பாருங்கள் அழகு... (அந்தமான் காதலி)

15. சாமக்கோழி கூவுதம்மா... (பொ. ஊ.புதுசு)

Kannan said...

3. இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது (?)

6. லில்லி மலருக்குக் கொண்டாட்டம் (உலகம் சுற்றும் வாலிபன்?)

enRenRum-anbudan.BALA said...

அன்பு நண்பர்களுக்கு,
"பல்லவியும் சரணம்" இறுதிப் பதிவில்கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி :)

வெங்கட் சார்,
வாங்க, வாங்க ! முதல் தடவையாக என் வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறீகள் :)


kannan, Venkat,
இருவருக்கும் 100 மதிப்பெண்கள் for getting 2/2 correct.
மூன்றாவது பல்லவி கொஞ்சம் கடினம் என்பது என் கணிப்பு !!!!

மிச்சம் இருப்பது 1,9,14,24 பல்லவிகள் மட்டுமே !!!
some clues for you !

1,24 --- ரஜினி படப்பாடல்கள்
14 --- கமல் படப்பாடல்
9 --- எம்ஜியார் (ஜெ..யுடன் இணைந்து நடித்த) படப்பாடல்


என்றென்றும் அன்புடன்
பாலா

ROSAVASANTH said...

//24. நாணத்தில் நீ இருப்பாய் மோனத்தில் நான் இருப்பேன் //

கண்மணியே காதல் என்பது..?(என்று நினைக்கிறேன்.இன்னும் சில மணி நேரத்தில் வருகிறேன். உடனடியாய் எதுவும் தோன்ரவில்லையெனினும்)

enRenRum-anbudan.BALA said...

//கண்மணியே காதல் என்பது..?
//
தவறு, ரோசா :(
கண்டுபிடிக்கப்படவேண்டிய நான்கும் சுலபமானவை தான் :)

தங்ஸ் said...

14. Intha minminikku kannil Oru - Sikappu Rojakkal

ROSAVASANTH said...

பாலா, தவறு என்ற சந்தேகத்துடனேயே எழுதினேன். நேற்று மீண்டும் வர முடியவில்லை. இன்றும் முடியாது. உடனடியாய் எனக்கு எதுவும் தோன்றவில்லை. (தங்கம் அதற்குள் கண்டுபிடித்துவிட்டார்.)

Chandravathanaa said...

பாலா
நான் லேற்.
அதற்குள் எனக்குத் தெரிந்தவைகள் எல்லாவற்றையும் எழுதி விட்டார்கள் போலுள்ளது.

enRenRum-anbudan.BALA said...

மீதி சரணங்களுக்கான பல்லவிகள் இதோ:


1. வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன, காலத்தின் கோலம் புரிந்தது, ஞானி தானெ நானும் --- ஆறிலிருந்து அறுபது வரை

9. அழகுக்கு மறுபெயர் பெண்ணா, அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா ? ---- திரைப்படம் ஞாபகமில்லை !!!

24. இவள் தேவதை, இதழ் மாதுளை, நிலா மேடையில் கலாநாடகம், கனாக்களில்லை காண்பதுண்மையே --- புவனா ஒரு கேள்விக்குறி


என்றென்றும் அன்புடன்
பாலா

தங்ஸ் said...

Bala, enakku neenga 100 mark kodukkave illai. Aniyaayam!!

pandian said...

தினமலரில் இன்று உங்கள் பதிவு குறித்து சொல்லி இருக்காங்க... உங்களுக்கும்
மற்ற நண்பர்களுக்கும்...
வாழ்த்துக்கள்...
http://dinamalar.com/2005june01/flash.asp

enRenRum-anbudan.BALA said...

Thangam,
sorry !!! 100/100 for you too :)

pandian,
//தினமலரில் இன்று உங்கள் பதிவு குறித்து சொல்லி இருக்காங்க... உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும்...
வாழ்த்துக்கள்...
//

Thanks for the info. and your kind wishes :))

குழலி / Kuzhali said...

http://dinamalar.com/2005june01/flash.asp

பாராட்டுக்கள் மாயவரத்தான், இட்லிவடை, பாலா மற்றும் அல்வாசிட்டி விஜய்

Vijayakumar said...

தினமலர் செய்திக்காக வாழ்த்துக்கள் பாலா.

enRenRum-anbudan.BALA said...

kuzali, Vijay
vAzththukkaLukku mikka nanRi !!!

சேகு said...

ஒராண்டு நிறைவில் ஏராளமான பதிவுகள், பதிலீடுகள் என தங்களுடைய சாதனைப் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

enRenRum-anbudan.BALA said...

சேகு,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

இது வெள்ளி விழா (25வது) பின்னூட்டம் :)

அன்பு said...

25 வாரங்கள் (நடுவில் ஓரிரு வாரங்கள் விட்டுப் போயிருக்கலாம்!) இப்போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டி, நல்ல பாடல்களைத் தேடி எடுப்பதில் என் காவு தீர்ந்து விட்டது :))

அது காவு or தாவு?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails